வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஜிமெயில் போன்ற மற்ற செயலிகளில் ஷேர் செய்யும் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச மெசேஜ், வாய்ஸ்கால், வீடியோ கால், குரூப் சேட்டிங் என பல்வேறு சேவைகளை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஜிமெயில் போன்ற மற்ற செயலிகளில் ஷேர் செய்யும் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் வைக்க முடியும். மேலும், இன்ஸ்டாகிராம், ஜிமெயில், கூகுள் போட்டோக்கள் போன்ற மற்ற செயலிகளிலும் நமது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ஷேர் செய்யும்படி கொண்டு வரப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் வரையில் மட்டுமே இருக்கும். அதன்பிறகு நீக்கப்பட்டு விடும். தற்போது இதே முறைதான் மற்ற செயலிகளிலும் கொண்டு வரப்படுகிறது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மற்ற செயலிகளுக்கு ஷேர் செய்தால், அதிலும் 24 மணி நேரம் மட்டுமே ஸ்டேட்டஸ் தெரியும்.
வாட்ஸஅப்பின் இந்த புதிய முயற்சியால் ஃபேஸ்புக்கில் தற்போது வைக்கப்படும் ஸ்டேட்டஸுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த வசதி ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் செயல்படும். தற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் பயனாளர்கள் ஸ்டேட்டஸ் ஷேர் வசதியை பார்க்க முடியும்.